மேம்பால பணிக்காக போக்குவரத்து தடை செய்யப்பட்ட உஸ்மான் சாலை மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்த மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், மக்கள் இப்போதிலிருந்தே புத்தாடை வாங்க டி.நகரில் குவியத்தொடங்கிவிட்டனர். இதனால் அந்த பகுதியில் போதிய 'பார்க்கிங்' வசதியின்றி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் போக்குவரத்து நெரிலை குறைக்க சென்னை மாநாகராட்சி முயற்சி எடுத்துள்ளது.
அந்தவகையில், மேம்பால பணிக்காக வாகன போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த உஸ்மான் சாலை மேம்பாலத்தில், பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்த மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்ததாவது, உஸ்மான் சாலை மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்த, வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, இதில், 70 கார்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் வரை நிறுத்தும் வகையில் இடவசதி உள்ளது என தெரிவித்தார்.